தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தக்கலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் விக்ரமன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் ஜாண் கென்னடி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் தங்கமணி கலந்து கொண்டார்.
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் பண பலன்களை உரிய நேரத்தில் பெற்று வழங்காத சுசீந்திரம் உதவி தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11ம் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
All the best Kennady sir. K.Chidambaram, union president, Musiri Block. Trichy dt.
ReplyDelete