அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆலத்தூர் ஒன்றியததில் உள்ள அனை த்து தொடக்கநிலை மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கைவினை பொருள்கள் தயாரித்தல் பயிற்சி குறுவள மையங்களில் நடந்தது. பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர்
சேகர் துவக்கி வைத்து பார்வையிட்டார். பயிற்சியில் படம் வரை தல், வண்ணம் தீட்டுதல், சதுர வடிவ அட்டைகளை கொண்டு பல உருவங்களை உருவாக்குதல், காகிதங்களை கொண்டு தோரணங்கள் உருவாக்குதல், பல்வேறு பொருட்களை கொண்டு ஏதேனும் உருவம் அல்லது காட்சியை ஒட்டு வேலை மூலம் உருவாக்க பயிற்சி அளித்தல் பற்றி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒட்டுப்படம் வரைதல், தேவையற்ற பொ ருள்கள் கொண்டு மாதிரி செய்தல், முகமூடி தயாரித்தல், படம் வரைதல், களிமண்ணால் உருவங்கள் செய்தல் மற்றும் கேலிச்சித்திரம் வரைதல் பற்றி உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை ஆசிரி யர் பயிற்றுனர்கள், ஆசிரி யர் கருத்தாளர்கள் வழங்கினர். ஆலத்தூர் ஒன்றியத் தில் பணியாற்றும் 168 தொ டக்கநிலை ஆசிரியர்கள், 112 உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.