Pages

Wednesday, December 19, 2012

அலறல்! மாணவர்களை கண்டு பள்ளி ஆசிரியர்கள்... 9ம் வகுப்பில் "சரக்கு' அடிக்கும் கொடுமை

வகுப்புக்கு நோட்டு, புத்தகம், எடுத்து வராமல், பாடம் நடத்தும்போது, குலுக்கல் சீட்டு விளையாடுவதும், மொபைல் ஃபோனில் படம் காட்டியும், மாணவர்கள் அட்டகாசம் செய்கின்றனர்' என, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில், ஆசிரியர்கள் குமுறினர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் வழி கல்வியில், 1,410 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்கள், மது போதையில் பள்ளிக்கு வந்து, கத்தி, கட்டை, இரும்பு பைப் ஆகியவற்றால், ஒருவரையொருவர் தாக்கி, கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, 17ம் தேதி, "காலைக்கதிர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதையடுத்து, பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை, பள்ளியில், பெற்றோர், ஆசிரியர்கள் கழக கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பள்ளி ஆசிரியர்கள் பேசியதாவது:
பெண் ஆசிரியைகளை, மாணவர்கள் பாட்டு பாடி, கேலி, கிண்டல் செய்கின்றனர். ஒரு வகுப்பில், ஐந்து மாணவர்கள் செய்யும் அடாவடியால், 50 மாணவ, மாணவியரின் படிப்பு கெடுகிறது. பாடம் நடத்தும் சமயத்தில், மாணவர்கள் குரூப்பாக அமர்ந்து கொண்டு குலுக்கல் சீட்டு ஆடுகின்றனர்.
அரசு, இலவசமாக புத்தகம் வழங்கினாலும், மாணவர்கள், ஒரு புக் மட்டும் எடுத்து வருகின்றனர். பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, வகுப்பில் இருந்து, சொல்லாமல் மாணவர்கள் எழுந்து செல்கின்றனர்.
பாடம் நடக்கும் சமயத்தில், மொபைல் ஃபோன் மூலம் பாட்டு, படம் பார்க்கின்றனர். ஹான்ஸ், குட்கா பாக்கு போட்டுக்கொண்டு போதையில் மாணவர்கள் உள்ளதால், நாங்கள் எதுவும் பேசமுடிவதில்லை. பல மாணவர்கள், தமிழில் படிக்க, எழுத தெரியாத நிலையில் உள்ளனர். இம்மாணவர்களால், மாணவியர் பள்ளிக்கு வர தயங்குகின்றனர். மாணவர்களுக்கு, பெற்றோர்கள் அறிவுரை கூறி ஒழுக்கத்தை கற்றுத் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:
பள்ளி நேரத்தில், மது அருந்திய மாணவர்கள், அடிதடியில் இறங்கியவர் என, ஒன்பது மாணவர்களுக்கு, டி.சி., கொடுத்து, பள்ளியை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். பொதுத்தேர்வு காரணமாக, அடிதடியில் இறங்கிய ப்ளஸ் 2 மாணவர்களை, "சஸ்பெண்ட்' செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

4 comments:

  1. ivarkal than indiavin varungala thoonkal.ippadithan tamilnadu mulukka irukkirathu. aanal entha media-vum ithai kandukolvathillai.aanal asiriyarai patri mattum yosithu yosithu eluthuvanga.aasiriyarin kudumbathai patri yosikkamaleye.
    aasiriyar velai kevalappatta polappu aki vittathu.

    ReplyDelete
  2. மாணவர்களுக்கு இலவசங்களை அள்ளி கொடுக்கும் அரசு, ஆசிரியர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். தண்டிக்க தடை விதிக்கும் அரசு , தவறு செய்யும் மாணவர்களை பேச்சினால் திருத்த முடியாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. மாணவர்களை கண்டிக்ககூடாது.குறைகளை கூறக்கூடாது,என்றால் இப்படித்தான் நடக்கும்!முதலில் ஆசிரியர்களுக்கு உரிமைகளை வழங்குகள்!

    ReplyDelete
  4. மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கலாம் என்ற சட்டம் கொடுத்துவிட்டால் இது போன்ற ஒழுக்க கேடான செயல்கள் குறையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை , மாணவர்களின் இந்த நிலைக்கு காரணம் , அதற்கான காரணிகள் ஆராயப்படவேண்டும். அவர்கள் சார்ந்துள்ள சமூகம், நண்பர்கள் ,பெற்றோர் ,சினிமா ,
    ஊடகங்கள், இவற்றின் தாக்கம் தான் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம். உளவியல் ரீதியான சமூக மாற்றம் வேண்டும் . பள்ளிகளில் நீதி போதனை கல்வி இல்லை, ஒழுக்க கல்வி இல்லை. ஒரு சில பள்ளிகளில் கணித ஆசிரியர் கணிதத்தை மட்டும் கற்றுக்கொடுப்பதும், அறிவியல் ஆசிரியர் அறிவியலை மட்டும் கற்றுக்கொடுப்பதும் மட்டும் தன கடமை என உள்ளனர். மாணவர்களுக்கு சமூக நெறியையும், ஒழுக்கத்தையும், நீதி போதனைகளையும் யார் கற்றுக்கொடுப்பது என்பது கேள்விக்குறி. அதற்கு நம் பாடத்திட்டமும் , கல்விக்கொள்கையும் ஒரு காரணம் தான்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.