Pages

Thursday, October 18, 2012

300 தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு: அதிகாரிகள் தவிப்பு

மதுரை மாவட்டத்தில், 300 பள்ளிகளில், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்களை மீண்டும் பெற, பில் தொகை விவரங்களை பெற முடியாமல், கல்வி துறை அதிகாரிகள் தவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில், 16 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், 300 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2009ல் இருந்து, மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. பல லட்ச ரூபாய் நிலுவையானதால், மின்வாரியம், 2012, ஜனவரியில், பள்ளிகளின் இணைப்புக்களை துண்டித்தது.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மேலமடை, ஒத்தக்கடை உட்பட, 50 பள்ளிகள் மூலம், அதிகபட்சம், 5 லட்சம் வரை நிலுவை உள்ளது. இப்பள்ளிகளில், 2009ல் இருந்து மின்சாரம் இல்லாததால், கோடையில் மின்விசிறி, குளிர் காலத்தில் லைட் வசதி இன்றி, மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

அரசு வழங்கிய, டி.வி.டி., கம்ப்யூட்டர், "டிவி&' ஆகியவற்றை இயக்க முடியாமலும், மூலம் ஆங்கிலம் கற்றல் போன்ற, "கணினி வழி கற்றல்&' திட்ட உபகரணமும், காட்சி பொருட்களாக உள்ளன.

கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இப்பிரச்னையை, ஆசிரியர் சங்கங்கள் எடுத்துச் சென்றன. பள்ளிகள் வாரியாக, மொத்த நிலுவை தொகை விவரம் தெரிவித்தால், அதற்கான நிதியை ஒதுக்குவதாக, தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மொத்த, "பில்&' விவரத்தை தெரிவிக்க, மின் வாரிய அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, புகார் எழுந்துள்ளது.

தலைமையாசிரியர்கள் கூறுகையில், " பள்ளி செயல்படும் பகுதிக்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகத்தில், மொத்த, பில் குறித்த தகவல் கேட்டால், ஓராண்டுக்கு மேல், பணம் கட்டாததால், அந்த தகவல் இல்லை. உயர் அதிகாரிகளிடம் கேட்டு பெறுங்கள் எனக் கூறி விடுகின்றனர்&' என்றனர்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுபாஷினி, "இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேசப்படும்" என்றார்.

தமிழகத்தில், 2009க்கு முன், பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை, அந்தந்த ஊராட்சி நிர்வாகம் செலுத்தியது. தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, பள்ளிகளுக்கு, அரசே மின் கட்டணத்தை செலுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போது இருந்தே, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மின் கட்டணம் செலுத்தும் பிரச்னை உள்ளது. பழைய முறைப்படி, பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை, ஊராட்சிகள் கட்ட வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.