Pages

Thursday, October 18, 2012

மாற்றுத் திறனாளிகளை கையாள்வதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து அக்.20-ம் தேதி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 2,607 தொடக்க நிலை ஆசிரியர்கள், 1,617 உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு இன்று தேனி அல்லிநகரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பை அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்துப் பேசினார். உதவித் திட்ட அலுவலர் கரிகால் வளவன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.