பாடப் புத்தகங்களை
அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சில்லரை
விற்பனையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பாடநூல் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:நடப்பு
கல்வியாண்டில் 10-வது மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் தேவையைக்
கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான
இலவச மற்றும் விற்பனை பாடப்
புத்தகங்கள் பள்ளிகள் திறக்கப்படும் முன்பே அச்சடித்து விநியோகம்
செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பாட நூல்களை
பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டது.இப்போது இறுதி கட்டமாக பிளஸ் 1 வகுப்பு இலவச பாட
நூல்கள் அச்சகங்களில் இருந்து நேரடியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு உடனடியாக விநியோகம்
செய்யப்பட்டுள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான விற்பனை பாட
நூல்கள் ஜூன் 14-ம் தேதி முதல் சென்னை தரமணியில் உள்ள தலைமை பாடநூல்
கிடங்கில் இருந்து சென்னை மாவட்ட பள்ளிகளுக்கும், ஜூன் 18-ம் தேதி முதல்
பாடநூல்கள் சில்லரை விற்பனையாளர்களுக்கும் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு
வருகிறது.அதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள இதர 21 பாடநூல் கழக
வட்டார அலுவலகங்களிலும் பள்ளிகள் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு
விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.