மாணவர் சேர்க்கை நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் இந்திரா
காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) மாணவர்களுக்குக் கையேடுகளையும்,
தகவல் புத்தகத்தையும் விற்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இத் தகவல் புத்தகம் நகரின் மையப் பகுதியில் ஜெய் சிங் சாலையில் உள்ள "இக்னோ'
மையத்தில் விற்கப்படுவதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2008-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த மையம் மாணவர்களுக்கான சேவைகளையும்,
பல்கலைக்கழக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் மையமாகச் செயல்பட்டு வருகிறது.
தகவல் பெற விரும்பும் மாணவர்கள் மண்டல மையங்களையோ அல்லது "இக்னோ'
தலைமையகத்தையோ அணுகி தகவல் கையேடு மற்றும் படிப்புகள் தொடர்பான தகவல் புத்தகத்தையும்
பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்துப் படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 30 ஆகும்
என்று பல்கலைக்கழகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.