Pages

Wednesday, July 18, 2012

கல்விக்கூடம் அருகில் சிகரெட் விற்பனை எஸ்பி எச்சரிக்கை

கல்வி நிலையங்களுக்கு அருகில் 100மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை, பான் பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

அவரது அறிக்கை: மதுரை மாவட்டத்தில் பள் ளிகள், கல்லூரிகள் உள் ளிட்ட கல்விநிலையங்களை ஒட்டி பீடி, சிகரெட், புகையிலை மற்றும் பான்பராக் உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்கப்பட்டு வருகி றது.
இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. எனவே கடைக்காரர் கள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கருதாமல், மாணவர்கள் நலன் கருதி இந்த வியாபாரத்தை தவிர்க்க வேண்டும். மீறி விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.