தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு புதிய பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.இது
குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், உயர்கல்வியை
மேலும் மேம்படுத்தும் வகையில், தேனி, திருவாரூர், விழுப்புரம்,
திருவண்ணாமலை,தர்மபுரி, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில்
புதிதாக
தொடங்கப்பட்டுள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில்
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் பொருட்டு ஒவ்வொரு பலவகை தொழில்நுட்பக்
கல்லூரியிலும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்
& கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் என்று ஒவ்வொரு துறைக்கும் ஒரு
துறைத் தலைவர் பதவி வீதம் 5 துறைத் தலைவர் பணியிடங்கள், விரிவுரையாளர்
பணியிடங்கள் 18, நூலகர் பணியிடம் 1, உடற்பயிற்சி இயக்குநர் பணியிடம் 1,
தொழிற்கூட கற்பிப்பவர் பணியிடங்கள் 2, திறன் பெற்றவர்/ஆய்வுக் கூட
உதவியாளர் பணியிடங்கள் 15, உதவியாளர் பணியிடங்கள் 2, இளநிலை உதவியாளர்
பணியிடங்கள் 2, தட்டச்சர் பணியிடம் 1, காவலர் பணியிடங்கள் 3, தோட்டக்காரர்
பணியிடம் 1, பெருக்குபவர் பணியிடம் 1,சுத்தம் செய்பவர் பணியிடம் 1 என
மொத்தம் ஒவ்வொரு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கும் 53 பணியிடங்கள் வீதம் 7
அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 371 பணியிடங்களை தோற்றுவிக்க
தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு
15 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதேபோன்று மதுரை
மாவட்டம், மேலூர் தாலுகா, அம்பலகாரன்பட்டியில் தொடங்கப்பட்டுள்ள அரசு
பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி
வழங்கும் பொருட்டு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ்
& கம்யூனிகேஷன் ஆகிய ஒவ்வொரு துறைக்கும் ஒரு துறைத் தலைவர் பதவி வீதம் 4
துறைத் தலைவர் பணியிடங்கள்,விரிவுரையாளர் பணியிடங்கள் 12, நூலகர் பணியிடம்
1, உடற்பயிற்சி இயக்குநர் பணியிடம் 1, தொழிற்கூட கற்பிப்பவர் பணியிடங்கள்
2, திறன் பெற்றவர்/ஆய்வுக் கூட உதவியாளர் பணியிடங்கள் 10, கண்காணிப்பாளர்
பணியிடம் 1, உதவியாளர் பணியிடம் 1, காவலர் பணியிடங்கள் 2, தோட்டக்காரர்
பணியிடம் 1, பெருக்குபவர் பணியிடங்கள் 2, சுத்தம் செய்பவர் பணியிடங்கள் 2
என மொத்தம் 39 பணியிடங்களை தோற்றுவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்
மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.8
அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகளுக்கும் சேர்த்து மொத்தம் 410
பணியிடங்களை தோற்றுவித்து, அதற்கென 16 கோடியே 89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
செய்து ஆணையிட்டுள்ள தமிழக முதலமைச்சரின் இந்த நடவடிக்கை மூலம்
இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறமை வாய்ந்த ஆசிரியர்களால் நல்ல
தரமான கல்வி அளிக்க வழிவகை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.