பொள்ளாச்சியில், தனியார் பள்ளி வளாகத்தில், கட்டட கட்டுமானப் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி - கோவை ரோடு, சக்தி மில் அருகே,
சுபாஷ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி
வளாகத்தில், புதிதாக வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணியில், 8
மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தினமும்
காலையில் வகுப்புக்குச் சென்றதும், அரை மணி நேரத்துக்குப் பின், நிர்வாகம்,
மாணவர்களை கட்டுமானப் பணிக்கு, வகுப்பு வாரியாக அனுப்புவதாக
கூறப்படுகிறது.
மாணவர்கள் தொடர்ந்து, 40 நிமிடம் கட்டட வேலை
செய்த பின், கேன்டினில் இலவசமாக வடை வழங்கப்படுவதாகவும், பிறகு அடுத்த,
"பேட்ச்" மாணவர்கள் வேலைக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள்
செங்கற்கள், சிமென்ட் கற்கள், சிலாப் தூக்கிச் சென்று கட்டுமானத்
தொழிலாளர்களுக்கு தருவது, சிமென்ட் கலவை அள்ளுவது போன்ற பணிகளில்
ஈடுபடுத்தப்படுவதாகவும், பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுபாஷ் வித்யா மந்திர் மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி முதல்வர் துர்காராஜ் கூறுகையில், "எங்கள் பள்ளியில்,
மாணவர்களுக்காக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பசுமைக் கழகம்
ஆகியவற்றில் இணைந்திருக்கும் மாணவர்களைக் கொண்டு, நாங்கள் மைதானத்தைத்
தயார் செய்யும் பணியை மேற்கொண்டோம், என்றார்.
விசாரித்து நடவடிக்கை:
இதுகுறித்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டபோது,
"மாணவர்களை இதுபோன்ற பணியில் ஈடுபடுத்துவது, சட்டத்துக்கு புறம்பானது.
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் தலைமையில் ஆய்வு செய்து, நடவடிக்கை
எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.