தமிழகத்தில் உள்ள
பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அண்ணா
பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறியுள்ளார்.சென்னையில்
அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க
இதுவரை சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும், விண்ணப்பிக்கும் அனைவருக்குமே
பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைக்கும்.ஜுலை மாதம் 9ம்
தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. அண்ணா
பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் சேர்க்கை பெறும்
மாணவர்களுக்கு ரூ. 32,500 கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேப்போல,
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் அனுமதி
பெறுபவர்களுக்கு ரூ.62,500 கல்விக் கட்டணமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது என்றும்
அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.