Pages

Saturday, May 26, 2012

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பங்கள் அதிகம்.

பொறியியல் படிக்க எந்த பிரிவில் இடம் கிடைக்கிறது என்பது முக்கியமல்ல. எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: கிராம மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, இந்த வளாகத்தேர்வு நடந்தது. பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கில் பங்கேற்க 2 லட்சத்து 7 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு, மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். குறிப்பிட்ட சில பிரிவுகளில் மட்டுமே சேர மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். எந்த பிரிவாக இருந்தாலும் அதில் சிறப்பாக படித்து முன்னேறும் மாணவனுக்கு வேலை நிச்சயம்.
இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் "சீட்' கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கவுன்சிலிங் சென்னையில் மட்டுமே நடக்கும். கடந்த ஆண்டு கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம் தான் இந்த ஆண்டும் வசூலிக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.