புதுச்சேரி ஜிப்மரில், ஒன்பது புதிய மருத்துவ
சிறப்பு படிப்புகள், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக, இயக்குனர்
ரவிகுமார் கூறினார்.
இது குறித்து அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., இடங்கள், இந்தாண்டு, 75லிருந்து 145 ஆக
அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பால், 20 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த
புதுச்சேரிக்கு, தற்போது, 40 இடங்கள் கிடைத்துள்ளன. இதேபோல் முதுநிலை
மருத்துவ படிப்பு இடங்கள், 88லிருந்து 124 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
டி.எம்., நெப்ரோலஜி, டி.எம்., மெடிக்கல்
ஆங்காலஜி, எம்.சி.எச்., பிளாஸ்டிக் சர்ஜரி, எம்.சி.எச்., குழந்தை மருத்துவ
அறுவை சிகிச்சை, இதயம் மற்றும் நரம்பு உணர்வு அகற்றியல், எம்.எஸ்.சி.,
எம்.எல்.டி., எம்.எஸ்.சி., மெடிக்கல் சைகாலஜி உட்பட, ஒன்பது புதிய மருத்துவ
சிறப்பு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
படிப்பு கால ஆராய்ச்சி நிதியாக, 20011-12
ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு, 33.67 லட்சமும், முதுநிலை
மருத்துவர்களுக்கு, 52.61 லட்சமும் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு,
இத்திட்டத்திற்கான தொகை, 3.25 கோடி ரூபாயாக ஒதுக்கிடப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னாள்
மாணவர்களின் உதவியோடு, கல்வி, நோயாளிகளின் மருத்துவ சேவை, ஆராய்ச்சிகள்
மேம்படுத்தப்படும். இவ்வாறு ரவிகுமார் கூறினார். டீன் ரெட்டி, மருத்துவ
கண்காணிப்பாளர் தாஸ், டாக்டர்கள் அனந்த நாராயணன், பத்ரிநாத், மக்கள்
தொடர்பு அதிகாரி மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.