திருவாரூரில் ஆசிரியர் தேர்வுக்கான போட்டித் தேர்வு
நடைபெறும் மையம் மாற்றப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.
பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரும் 27}ம் தேதி நடத்தப்படவுள்ள முதுநிலை
ஆசிரியர் பணியிடத்துக்கான நேரடி போட்டித் தேர்வு நடைபெறும் திருவாரூர் மாவட்ட
மையங்களில் ஒன்றான
திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்துக்குப் பதிலாக
திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வா.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை மையமாகக் கொண்டு நுழைவுச் சீட்டுப்
பெற்றவர்கள் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி மையத்துக்குச் சென்று ஆசிரியர் போட்டித்
தேர்வை எழுதலாம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.