Pages

Monday, May 21, 2012

சிறப்பு துணைத்தேர்வு கட்டணம் எவ்வளவு?

மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களையும், சிறப்பு துணைத்தேர்வு மூலம் தேர்வெழுத தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாத அல்லது விண்ணப்பித்து தேர்வு எழுதாதவர்கள், ஜூன் மற்றும் ஜூலையில் நடக்கும் சிறப்பு துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

இதில், தேர்வுக் கட்டணமாக, ஒரு பாடத்திற்கு 85 ரூபாய், இரண்டு பாடங்களுக்கு 135 ரூபாய், மூன்று பாடங்களுக்கு 185 ரூபாய், நான்கு பாடங்களுக்கு 235 ரூபாய், ஐந்து பாடங்களுக்கு 285 ரூபாய், ஆறு பாடங்களுக்கு 335 ரூபாய் என, கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதற்காக,"எஸ்.ஹெச்' என குறிப்பிட்ட விண்ணப்பங்களை, 23 முதல் 28 வரை பள்ளியில் பெற்று பூர்த்தி செய்து, அந்தந்தப் பள்ளிகளிலேயே 28ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இதற்கான தேர்வுக் கட்டணத்தினை பணமாக பள்ளியில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், "ஜெ.ஹெச்.,' என குறிப்பிட்ட விண்ணப்பப் படிவங்களை பெற்று, 28ம் தேதி மாலை, 5.45க்குள் பதிவு அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தனித்தேர்வருக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட் நகல் அல்லது இணையதளம் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்க வேண்டும். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.