சென்னையில், ஐந்து இடங்களில், பிளஸ் 2
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை
செய்யப்படும் என, அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்:
1. ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
2. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை(தெற்கு) காந்தி இர்வின் சாலை, எழும்பூர்.
3. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் (மத்திய சென்னை), அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
4. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (கிழக்கு), ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு.
5. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (வடக்கு), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர்
ஆகிய ஐந்து இடங்களில், பிளஸ் 2 விடைத்தாள்
நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும் 25ம் தேதி மாலை, 5.45 மணிக்குள்
விண்ணப்பத்தினை பெற்ற அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்விண்ணப்பங்கள், சென்னை டி.பி.ஐ.,
வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்திலோ அல்லது சென்னை அரசு
தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகத்திலோ வழங்கப்படாது. இவ்வாறு,
அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு
விண்ணப்பிப்பவர்கள், அடையாளம் தெரியாத நபர்கள் ஏவரேனும் தொடர்பு கொண்டு,
தவறான வழிகாட்டுதலால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாக கூறினால், அதை
மாணவர்கள் நம்பி ஏமாற வேண்டாம். இத்தகவலை, அரசு தேர்வு இயக்ககம்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.