Pages

Tuesday, May 22, 2012

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - ஒட்டுமொத்த அளவில் முதலிட விபரங்கள்.

அனைவரும் பேராவலுடன் எதிர்பார்த்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு, முதலிடத்தை, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 2 மாணவிகள் தலா 1190 மதிப்பெண்கள் பெற்று தட்டிச் சென்றுள்ளனர்.
புதுச்சேரியிலுள்ள புனித ஜோசப் க்ளூனி மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த S. ஸ்வப்னா, செங்கல்பட்டு மாவட்டம், மடிப்பாக்கத்திலுள்ள, பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த V. பவித்ரா ஆகியோரே அந்த 2 பேர்.

இரண்டாமிடத்தை, தலா 1189 மதிப்பெண்களுடன், 4 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களின் விபரம்;
P. ராகுல் ஜெயின் - கோவை சொக்கம்புதூரிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ. மேல்நிலைப்பள்ளி
R. மஹீமா பென் - ராசிபுரத்திலுள்ள எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி
S. சுஷ்மிதா - நாமக்கல் கண்டம்பாளையத்திலுள்ள எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி
ஆன்சி பிலிப் - சென்னை அண்ணா நகரிலுள்ள சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
மூன்றாமிடத்தைப் பொறுத்தளவில், அங்கே மொத்தம் 12 பேர் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தலா 1188 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அவர்களின் விபரங்கள்
S. அர்ஜுன் - திருநெல்வேலி மகாராஜா நகரிலுள்ள எஸ்.ஜே.எஸ்.எஸ்.ஜே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
S. கனுஷியா - சேலத்திலுள்ள குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
C.M. கிருத்திகா - சேலத்திலுள்ள குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
D. கார்த்திகா - நாமக்கல் கண்டம்பாளையத்திலுள்ள எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி
P. அசோக் குமார் - நாமக்கலிலுள்ள கிரீன்பார்க் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
C. மணிகண்டன் - நாமக்கல் மாவட்டம் பண்டமங்கலத்திலுள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
S. அரவிந்த் - செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரிலுள்ள சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
R. சுந்தர ராமன் - செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையிலுள்ள எஸ்.ஆர்.டி.எப். விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி
R. தீபா - செங்கல்பட்டு மாவட்டம், ஆதம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி
S. பவானி - மத்திய சென்னையிலுள்ள ஸ்ரீ அஹோபிலா மட் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி
V. பிரியா - மத்திய சென்னையிலுள்ள ஸ்ரீ அஹோபிலா மட் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி
ஆசிஷ் ராஜேஷ் - சென்னை கோபாலபுரத்திலுள்ள டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.