Pages

Monday, April 23, 2012

பள்ளி மாணவர்களுக்கு சி புரோகிராம் பயிற்சி.

பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், தங்களது கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் வகையில் சி புரோகிராம் பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் அளிக்கிறது.
ஒரு வார கால இந்த பயிற்சியில் சி புரோகிராமின் அடிப்படை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் கற்றுக் கொடுக்கப்படும்.
மே மாதம் 15ம் தேதியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரிவாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதற்குக் கட்டணமாக ரூ.500  அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கு டிடியாக எடுக்க வேண்டும். காலை 9 மணி முதல் 5 மணி வரை அண்ணா பல்கலையில் உள்ள ராமானுஜன் கணினி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.