Pages

Monday, April 2, 2012

ஆன்லைனில் பதிவு செய்வதில் குழப்பம்.


ஆசிரியப் பயிற்சி முடித்தவர்கள், வேலைவாய்ப்பு பதிவிற்காக ஆன்லைனில் பதிவு செய்தபோது, பலருக்கு பதிவு தேதி முடிந்துவிட்டதாக காட்டியதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
ஆசிரியப்பயிற்சி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தாமதமாக டிசம்பரில் வெளியானது. மதிப்பெண் பட்டியல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.

பட்டியலை பெற்றவர்கள் திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கு சென்றனர். அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால், ஆன்லைனில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
கம்ப்யூட்டர் சென்டர்களில் பதிவு செய்ய முயன்றபோது, பலருக்கு பதிவு தேதி முடிந்து விட்டதாக காட்டியது. ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்துள்ள அட்டையில் மே வரை அவகாசம் உள்ளது. இக்குழப்பத்தால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.