பிளஸ் 2 தேர்வில் 60 முதல் 80 சதவீதம் வரை மதிப்பெண் பெறும் மாணவர்கள் எந்த படிப்புகளை தேர்வு செய்தால் எதிர்காலம் சிறக்கும்'' என்ற கேள்விக்கு மதுரையில் "தினமலர்' சார்பில் நேற்று நடத்த உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டு துறை ஆர்வலர் ஆர்.கார்த்திகேயன் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.
அவர் பேசியதாவது: ஒரு புள்ளி விபரம் அடிப்படையில், பிளஸ் 2 தேர்வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களே பின்காலத்தில் சமூக தலைவர்களாக, அறிஞர்களாக, சிந்தனைவாதிகளாக, அரசியல்வாதிகளாக, தொழிலதிபர்களாக உருவாகின்றனர். தேர்வில் 95 சதவீதம் வரை மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகவும், அரசு வேலைக்கும் அதிகம் செல்கிறார்கள். நமது கல்வித் திட்டம் அனைத்து தரப்பு மாணவர்களையும் ஒரே எண்ணத்தில் கணக்கிடுகிறது.
ஓராண்டுக்குள் பாடத் திட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்கும் வகையில் மட்டுமே ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால், உயர் கல்வி முடித்து வெளியில் வருவோரில் 10 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இதற்கு பெற்றோர் வற்புறுத்தலால் விருப்பம் இல்லாத பாடங்களை தேர்வு செய்து படிப்பதே காரணம்.
என்ன தேவை என்பதில் இப்போதைய மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் விரும்பிய படிப்புகளை தேர்வு செய்ய பெற்றோர்கள் குறுக்கே நிற்க கூடாது. 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்கள் மீடியா, மேலாண்மை படிப்புகள், சுற்றுலா, ஓட்டல் மேனேஜ்மென்ட், பேஷன் டெக்னாலஜி, வங்கி, இன்சூரன்ஸ் போன்ற துறை படிப்புக்களை தேர்வு செய்யலாம். வங்கி துறையில் இன்னும் 10 ஆண்டுகளில் ஏராளமான காலி பணியிடங்கள் ஏற்படும், என்றார்.
வழிகாட்டி நிகழ்ச்சியை ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.வி.எஸ்., நிறுவனங்கள், சபோல் மினரல் வாட்டர் மற்றும் ரேடியோ மிர்ச்சி இணைந்து வழங்கின.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.