Pages

Saturday, April 7, 2012

சிறப்பு பி.எட் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் வழங்கவும், தேர்வில் பங்கேற்க அனுமதிக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவு.

சிறப்பு பி.எட் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் வழங்கவும், தேர்வில் பங்கேற்க அனுமதிக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட சிறப்பு பி.எட் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் வடிவேல்முருகன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: மனநலம் பாதித்தோர், பார்வையற்ற, காது கேட்கும் திறன் இல்லாத மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதற்கான சிறப்பு கல்வியில் பி.எட் முடித்துள்ளோம். போதிய எண்ணிக்கையில் சிறப்பு பள்ளிகள் இல்லாததாலும், இருக் கும் பள்ளிகளில் ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக இல்லாததாலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டாகியும் வேலை கிடைக்க வில்லை.
இதனிடையே, சிறப்பு பிஎட் படிப்பை, பொதுவான பிஎட் படிப் பாக கருதி, சிறப்பு பள்ளிகள் மட்டும் அல்லாமல், மற்ற பள்ளிகளிலும் ஆசிரியர்களாக நியமிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட வில்லை. தமிழகத்தில் மற்ற பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு சிறப்பு பிஎட் முடித்தவர்களை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கம் பரிந்துரை செய்வதில்லை.
தமிழகத்தில் ஜூன் 3ல் ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது.
அதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. சிறப்பு பிஎட் முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் வழங்க மறுக்கின்றனர். சிறப்பு பிஎட் முடித்தவர்களுக்கும், ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் வழங்க வும், ஆசிரியர் தகுதி தேர்வில் அனு மதிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், சிறப்பு பிஎட் முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் வழங்கவும், ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதிக்கவும் அரசுக்கு உத்தர விட்டார். மனுதாரர் சார்பில் வக்கீல் கள் தாளை முத்தரசு, குருநாதன் ஆஜராகினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.