Pages

Saturday, April 7, 2012

பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிய வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இலவச கட்டாய கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிய வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 18 நாட்கள் நடைபெறுகின்ற இந்த கணக்கெடுப்பில் அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
பள்ளி செல்லும் வயதில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கட்டாயம் என்பதை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் உறுதி செய்கிறது. 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி கற்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த ஆண்டு பள்ளி செல்லா குழந்தைகள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்படுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இது தொடர்பாக இவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கணக் கெடுப்பில் கண்டறியப்படும் குழந்தைகள் பின்னர் பள்ளி இணைப்பு மையங்கள், சிறப்பு மையங்களில் சேர்க்கப்பட்டு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளனர். வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் இந்த கணக்கெடுப்பு பணிகள் 27ம் தேதி வரை நடக்கிறது. 18 நாட்கள் நடைபெறுகின்ற இந்த கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மேற்பார்வை செய்கின்றனர். இது தொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் முகமது அஸ்லம் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.