சட்டசபையில் இன்று இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ., செ.கு.தமிழரசன் பேசும்போது-
அரசு பள்ளியை காட்டிலும் தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் மாயை உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என்றார். அப்போது கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறியதாவது:-
தனியார் பள்ளி கல்வி முறையை விட அரசு பள்ளிகளில் கல்வி முறையை நமது முதல்- அமைச்சர் மேம்படுத்தி உள்ளார். மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையை அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்க சதுரங்க விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
குழந்தைகளின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தவும் வசதிகளை உருவாக்கி கொடுத்துள்ளார். கணினி மூலம் கல்வி கற்றலை அரசு பள்ளிகளில் ஏற்படுத்தியுள்ளார். தனியார் பள்ளிகளை காட்டிலும், அரசு பள்ளிகளில் இது போன்ற நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளார்.
மற்ற மாநில முதல்வர்களை காட்டிலும் 'ஹைடெக்' முதல்வராக புரட்சி தலைவி செயல்படுகிறார். எனவே எதிர்காலத்தில் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதை விட அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்ற நிலை மக்கள் மத்தியில் உருவாகும். இந்த அளவுக்கு அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து கொண்டே வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.