கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையுடன் கூடிய இரு மாத இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கலெக்டர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் சுயதொழில், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் என்.சி.வி.டி., சான்றிதழ் பயிற்சிகள் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி ஓசூர் ஐ.டி.ஐ., மற்றும் என்.சி.வி.டி., சான்றிதழ் பெற்ற தனியார் தொழில் பயிற்சி நிறுவனங்கள் மூலம் 75 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இரு மாதம் பயிற்சி உதவி தொகை, உணவு, தங்கும் வசதி ஆகியவை இலவசமாக செய்து தரப்படும்.
பயிற்சியில் சேர விரும்பும் 14 வயது பூர்த்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் வரும் ஏப்ரல் 25ம் தேதிக்குள் "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண் 22, 23, தரைத்தளம், கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி' என்ற முகவரியை அணுகி விண்ணப்பித்து பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.