Pages

Monday, April 16, 2012

அரசுப் பள்ளிகளுக்கு 29 முதல் கோடை விடுமுறை.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்குத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று மற்ற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுகின்றன. கடைசி தேர்வு வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
சில மாவட்டங்களில் இயற்கை இடர்பாடுகள், உள்ளூர் திருவிழாக்கள் காரணமாக 220 வேலை நாள்களை நிறைவு செய்யாத பள்ளிகளுக்கு மே 1-ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாத நிலையில், இதே கால அளவில் ஓரிரு நாள்களில் விடுமுறை அறிவிக்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.