To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Pages
▼
Friday, March 16, 2012
பதவி உயர்வு குறித்து விளக்கம் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.
01.01.2011 பதவி உயர்வு தேர்தோர் பட்டியலில் உள்ள பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் 30 பேர் அரசாணை எண்.15 பள்ளிக்கல்வித்துறை நாள்.23.01.2012 எதிர்த்து தொடுத்த வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க மதுரை உயர்நிதீமன்ற கிளை அதிரடி உத்தரவு. அடுத்தவாரம் செவ்வாய் / புதன்கிழமைக்குள் அரசு பதிலளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேறு 17 ஆசிரியர்கள் தொடுத்த வழக்கிலும் தொடக்ககல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியர் கூறுகையில் பதவி உயர்வு என்பது ஒரு அரசு ஊழியரின் அடிப்படை உரிமை அதேபோல் வழக்கமாக ஒவ்வொரு வருடமும் தொடக்கக்கல்வி துறையில் தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் கல்வி தகுதிற்கு ஏற்றவாறு முதலில் பதவி உயர்வு வழங்கிவிட்டுத்தான் எஞ்சியுள்ள இடங்களுக்கு நேரடி நியமனம் வழங்கப்படும்(அரசாணை (நிலை) எண். 239 பள்ளிக்கல்வித்துறை நாள். 22.09.2007). ஆனால் தற்போது அதற்கு நேர்மாறான நிலை ஏற்பட்டுள்ளது பதவி உயர்வு குறித்து தெளிவான அரசாணை இருந்தும் பதவி உயர்வு மறுக்கப்படுவது ஒரு ஆசிரியரின் உரிமையை தட்டிப்பறிக்கும் நிலை என தெரிவித்தார். மேலும் ஒரு ஆசிரியர் கூறுகையில் பலமுறை தொடக்கக்கல்வி இயக்குனரிடம் இதுகுறித்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண் ஆசிரியர்களும் இயக்குனரிடம் முறையிட்டும் பயனில்லை என்றும் வேறு வழியில்லாமல் தான் தற்போது உயர்நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழ்நிலைக்கு எங்களை ஆள்ளாக்கியுள்ளனர் என்றும்,அதிக மனவேதனைக்கு ஆளாகியுள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்தார். தற்போது தமிழக அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதால் விரைவில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.
வழக்கு என்ன நிலையில் உள்ளது? இடைக்கால தீர்ப்பு எதுவும் வழங்கப்பட்டுள்ளதா?
ReplyDeleteI had also filed a writ in Chennai High Court on the same issue. Whether any interim orders issued in the previous cases filed.
ReplyDelete