டெல்லி: நாட்டின் 81வது பட்ஜெட்டில், 6000 மாதிரிப் பள்ளிகள் 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏற்படுத்தப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கென்று ஒதுக்கீடுகள் மற்றும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு;
* கல்வி உரிமைச் சட்டம்(RTE) - சர்வ சிக்சா அபியான்(SSA) திட்டத்திற்காக, இந்த 2012-13 நிதியாண்டில் ரூ.25,555 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 21.7% அதிகம்.
* ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்சா அபியான்(RMSA) திட்டத்திற்கு இந்தாண்டு ரூ.3124 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டைவிட 29% அதிகம்.
* மாணவர்களுக்கு எளிதான முறையில் கல்விக்கடன் கிடைக்க, கடன் உத்திரவாத நிதியம் ஏற்படுத்தப்படும்.
* பள்ளிக் கல்விக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* 7 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆராயச்சி மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
* பள்ளிகளின் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.11000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சில சலுகைகள், மிக முக்கியமான துறையான கல்வித்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.