To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Pages
▼
Friday, March 16, 2012
பதவி உயர்விற்கும் TET அவசியமா?
தேவையில்லாமல் ஒரு புதிய செய்தியாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு தான் இனி பதவி உயர்வு என்றும் 31.12.2010 பிறகு பி.எட்., முடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு இனி பதவி உயர்வு கிடையாது என்றும் புரளி பரப்பப்பட்டு வருகிறது. அப்படி சொல்வது உண்மையானால் கடந்த செப்டம்பர் 2011 ல் நடந்த பதவி உயர்வு கலந்தாய்விலும், பின்பு டிசம்பர் 2011 ல் நடந்த பதவி உயர்வு கல்ந்தாய்விலும் பதவி உயர்வு எவ்வாறு வழங்கப்பட்டது. எனவே இது குறித்து அச்ச பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அரசோ / பள்ளிகல்வி இயக்குனரகமோ / தொடக்கக்கல்வி இயக்குனரகுமோ எந்தவித அரசாணையோ அல்லது செயல்முறைகளோ, அறிவிப்போ இதுவரை வெளியிடவில்லை என தெரிவித்துக்கொள்கிறோம். ஆசிரியர் தகுதி தேர்வானது புதியதாக 23.08.2010க்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கும் இனி நியமனம் செய்யப்பட உள்ளவர்களுக்கும் தான் பொருந்தும் அரசாணையும் அதை தான் கூறியுள்ளது ஏற்கெனவே நியமனம் செய்யப்பட்டு தற்போது பதவி உயர்விற்காக காத்திருப்பவர்களுக்கு பொருந்தாது. இது குறித்து தெளிவுரையோ அல்லது அரசாணையோ இனி வருமேயானால் நிச்சயமாக நமது இணையதளத்திலும், SMS CHANNEL வழியாகவும் தெரிவிக்கப்படும். எனவே தேவையில்லாமல் பொய்யான தகவலை பரப்பி மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுகொள்ளபடுகிறார்கள்.
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.