Pages

Wednesday, March 28, 2012

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்.

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும், 226 இளநிலை உதவியாளர்களுக்கு, உதவியாளர் பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், 29.03.12 அன்று சென்னையில் நடக்கிறது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில், இளநிலை உதவியாளர்களாகப் பணியாற்றி வருவோரில், பணிமூப்பு அடிப்படையில், 226 பேர் உதவியாளர்களாகப் பதவி உயர்வு செய்யப்படுகின்றனர்.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 29.03.12 அன்று பகல் 2 மணிக்கு, கவுன்சிலிங் நடக்கிறது. இதில், சம்பந்தப்பட்டவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.