ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் வேலைவாய்ப்பு மாவட்ட குறியீடு குறித்த விபரங்கள் இல்லாததால் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து கல்வி மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தகுதியானவர்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பித்து வருகின்றனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் வேலைவாய்ப்பு மாவட்ட குறியீடு குறித்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்த குறியீடு குறித்த விபரங்கள் விண்ணப்ப படிவத்துடன் அளிக்கப்பட்டுள்ள தகவல் படிவத்தில் குறிப்பிடபடவில்லை. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன குறியீடு என்பதை இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றோர் உரிய முறையில் விண்ணப்பத்தில் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆளுக்கொரு குறியீட்டை கூறுவதால் இவர்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, வருமானத்தை மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் "குறி' வைக்காமல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக அனைத்து விபரங்களையும் தெளிவாக குறிப்பிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இடைநிலை, பட்டதாரி ஆசிரிய தகுதி பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.