Pages

Friday, May 5, 2017

கல்விக் கட்டணத்தை அறிவித்த பிறகு எம்.டி.,எம்.எஸ்.,சேர்க்கை

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை அறிவித்த பிறகே, அதற்கான கவுன்சிலிங் நடத்த வேண்டும் என பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


புதுச்சேரி மாநில அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் சுகாதார அமைச்சகம், தனியார் நிகர்நிலை, சிறுபான்மையின மருத்துவக் கல்லுாரிகள் அனைத்தும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்களை அளிக்க வேண்டும் என்ற உத்தரவால், புதுச்சேரியில் முதல் முறையாக 53 முதுநிலை பல் மருத்துவ இடத்தில், 27 இடங்கள் மாநில அரசுக்கு வழங்கப்பட்டன.

இதற்கான கலந்தாய்வில், தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசு அறிவிக்காததால், ஏராளமான மாணவர்கள் சென்டாக் கலந்தாய்வில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக கல்விக் கட்டணத்தை அறிவித்த பிறகே, எம்.டி., எம்.எஸ்., படிப்புகளில் வழங்கப்பட்டுள்ள 146 இடங்களுக்கான சென்டாக் கலந்தாய்வை நடத்த வேண்டும். இல்லையென்றால், அரசு பெற்ற 50 சதவீத இடங்கள், புதுச்சேரி மாணவர்களுக்கு பயனில்லாமல் போய்விடும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.