பல்கலைக்கழகத்தில், வணிகப் பாடத்திட்டத்தில் இருந்து, வெளிநாட்டு கல்வியாளர்களின் படைப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக, பழமையான வேதம் மற்றும் யோகா சேர்க்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் வணிக பாடத்திட்டத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களின் படைப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. தற்போது, இந்தப் பாடங்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக, யோகா மற்றும் வேதங்கள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பல்கலையின் பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள, பேராசிரியர், நவீன் மாதுர் கூறியதாவது:
மாணவர்கள், நம் நாட்டின் இதிகாசங்கள் மற்றும் இந்திய கலாசாரத்தை நன்கு அறிந்தவர்களாக உருவாவதற்கும், வணிக மேலாண்மையை புதிய வடிவில் தருவதற்காகவும், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பழமையான நம் இதிகாசங்களில் கூறப்பட்ட தத்துவங்களைக் வைத்து, நவீன மேலாண்மையின் அடிப்படை தயாரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கல்வியாளர்களின் கட்டுரைகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ஆகியோரின் தத்துவம் மற்றும் ராமாயணம், பகவத்கீதையின் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.