Pages

Thursday, March 9, 2017

மேல்நிலைப் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி தொடக்கம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை தொடங்கியது. இதில், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 3,371 தேர்வு மையங்களில் 5 லட்சத்து 27,152 மாணவர்கள், 5 லட்சத்து 6,756 மாணவிகள் என மொத்தம் 10 லட்சத்து 33,908 பேர் எழுதுகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில், தேர்வு நடைபெறும் போது முறைகேடு நடைபெறுவதை தடுக்கும் வகையில், 176 பறக்கும் படை உறுப்பினர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 10 மொழிகளில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. கன்னடம், உருது, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 7,327 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலைப் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாநிலத்தில், தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது தவறான தகவலாகும். தேவையான தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.