Pages

Tuesday, March 28, 2017

அடிப்படை எழுத்தறிவு பெற்ற 4,000 பேருக்கு ஏப்.,1ல் தேர்வு

கற்கும் பாரத மையங்களில், அடிப்படை எழுத்தறிவு பெற்ற, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4,000 பேர், சமநிலை கல்வி தேர்வு எழுதவுள்ளனர். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு, கற்கும் பாரத மையங்கள் மூலம், இரண்டாம் வகுப்புக்கு இணையாக, அடிப்படை எழுத்தறிவு வழங்கப்பட்டது. 


இதில் கல்வியறிவு பெற்றவர்களுக்கு, மூன்றாம் வகுப்புக்கு இணையாக கல்வி வழங்க, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம் களம் வகுத்தது. அதன்படி, 2016 டிச., முதல், முன்மாதிரி திட்டமாக, தமிழகத்தில், சேலம், தர்மபுரி, விழுப்புரம், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில், சமநிலை கல்வி அறிமுகமானது. 

தற்போது இந்த மையங்களில் பயின்றவர்களுக்கு, சமநிலை கல்விக்கான தேர்வு, ஏப்.,1ல் துவங்குகிறது. ஏப்., 2, 8, 9 தேதிகளில் தேர்வு நடக்கிறது. தமிழ், கணிதம், சமூக அறிவியல், கணினி அடிப்படை திறன் என மொத்தம் நான்கு பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.

தேர்வில், தலா, 40 மதிப்பெண் பெற்றவர்கள், மூன்றாம் வகுப்புக்கு இணையாக, கல்வியறிவு பெற்றதாக, தேர்ச்சி சான்று வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில், ஏப்.,1ல் துவங்கும் தேர்வில், 4,000 பேர், 200 மையங்களில் எழுதுகின்றனர். 

கோபி யூனியனில், 14 மையங்களில், 280 பேர் எழுதுகின்றனர். தேர்வானது தேர்வு நாளில், தினமும் காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணி வரை நடக்கும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.