Pages

Friday, March 31, 2017

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம்; அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்துமொத்தம் 554 உள்ளன.

அரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர்நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீதம் இடங்களை மட்டும் கொடுத்தால் போதும். தனியார் கல்லூரிகள் வைத்திருக்கும் 35 சதவீத இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. 1 லட்சம்இடங்கள் 1 லட்சம் மாணவ-மாணவிகள் தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் கடந்த ஆண்டு சேர்ந்தனர். இந்த வருடமும் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் இன்றி உள்ளனர். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு குறைவுதான். சாதாரண கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க தனியார் நிறுவனங்கள் வருவதில்லை. அதன் காரணமாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்பில் நிறைய பேர் சேருவார்கள் என்று தெரிகிறது.

கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஏப்ரல் 2-வது வாரம் கலந்தாய்வு முறையில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு போலவே கலந்தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.

அந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளியாகிறது. அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.