Pages

Friday, March 31, 2017

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


600 உடற்கல்வி ஆசிரியர்கள், 300 ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் 100, தையல் ஆசிரியர்கள் 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார்.

சரியான வினாக்கள்தான்: பிளஸ் 2 கணிதத் தேர்வில், பாடத் திட்டத்தில் இல்லாத கடினமான வினாக்கள் கேட்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாடத் திட்டத்திலிருந்து தான் சரியாகக் கேட்கப்பட்டுள்ளது என்றார் ச.கண்ணப்பன்.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தற்போது நடைமுறையில் இல்லாத திட்டக் குழு தொடர்பான வினா இடம் பெற்றது குறித்த கேள்விக்கு, திட்டக் குழுவின் தலைவர் யார் என்று, பொதுவானதாக சரியாகவே கேட்கப்பட்டுள்ளது. திட்டக் குழுவுக்கு பதிலாக நடைமுறையில் உள்ள நிதிஆயோக்கின் தலைவரும் பிரதமர் தான், அதனால், வினாவில் தவறில்லை என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.