வரும், 19ல், முதுநிலை ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், தேர்வு பணி உழைப்பூதியம் உயர்த்தக்கோரி, பிப்., 19ல், உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், சேலம் மாவட்ட தலைவர் பாரி கூறியதாவது:
நடுவண் அரசு பள்ளிகளை போல், தமிழகத்திலுள்ள விடைத்தாள் திருத்தும், முதுநிலை ஆசிரியர்களுக்கு, ஒரு விடைத்தாளுக்கு, 15 ரூபாய் வழங்க வேண்டும். தேர்வு மைய மேற்பார்வை பணிக்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் ஆசிரியர்களுக்கு, தினப்படி அதிகரிக்க வேண்டும்.
பெரும்பாலான பள்ளிகளில் உள்ள பொதுத்தேர்வு மையத்தில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அப்பள்ளிகளில், ஒரு முதன்மை கண்காணிப்பாளர் மட்டும் நியமிக்கப்படுகின்றனர். இதனால், தேர்வு பணி முடிய தாமதமாகிறது.
400 மாணவர்களுக்கு, ஒரு முதன்மை கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும். தேர்வு காலங்களில், முதன்மை கல்வி அலுவலர்களை, மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி, சங்கம் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
சேலம் மண்டலமான, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த, சங்க ஆசிரியர்கள், சேலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.