இந்திராகாந்தி விருதுக்கு, நாட்டு நலப்பணி திட்டத்தினர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாட்டுநலப்பணி திட்ட மாநில அலுவலர் குழந்தைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் இளைஞர் மேம்பாட்டுத் துறை, ஆண்டுதோறும் இந்திராகாந்தி பெயரில், வியத்தகு சேவைபுரிந்த என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட அலுவலர்கள் மற்றும், தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.
2016-17ம் ஆண்டிற்கான இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருது பற்றிய விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தை, Yas.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும் மே மாதம் 2ம் தேதிக்குள், புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள கல்வித் துறை வளாகத்தில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்கள் பெற, 9486366572 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.