Pages

Wednesday, January 4, 2017

ஓ.பி.எஸ். தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்


தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் இன்று(ஜன.,4) தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.


தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு துவங்கும் இந்த கூட்டத்தில், வறட்சி, விவசாயிகளின் தொடர் மரணம், மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 2017 -18 ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.