Pages

Monday, January 30, 2017

தேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை

'தேர்வுகளை, விழாவாக கருத வேண்டும்; மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷய மாக பார்க்கக் கூடாது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள், அதிகமாக புன்னகைக்க வேண்டும்,'' என, பிரதமர், நரேந்திர மோடி கூறியுள்ளார். 'மன் கீ பாத்' எனப்படும், 'மனதின் குரல்' ரேடியோ நிகழ்ச்சியில், நேற்று, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை:


தேர்வு என்பதை, வாழ்க்கைக்கான சோதனை யாக மாணவர்கள் கருதக்கூடாது. தேர்வை, மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயமாக பார்க்காமல், மாணவர்களும், பெற்றோரும்,
விழாவாக நோக்க வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அதிகமாக புன்னகையுங்கள்.

மாணவர்கள், தேர்வுக்காக படிக்கையில், அவ்வப் போது ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற மனம், அதிகளவில் நினைவில்கொள்ளும் திறனை பெறுகிறது. பிறருடன் போட்டி போடுவதை காட்டி லும், தன்னுடன் போட்டி போடும் மனப்பாங்கை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பிறர் சாதனை களுடன் போட்டியிடாமல், தன் சாதனைகளை முறியடிக்கும் நோக்கில் போட்டி போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த ஓர் ஆண்டில், படித்த விஷயங்களை வெளிப் படுத்தும் அரிய வாய்ப்பு, தேர்வு; அதை எதிர் கொள் வதில் பேரார்வத்தை மாணவர்கள் வைத்திருக்க வேண்டும். தேர்வை சந்தோஷமாக எதிர் கொள்வோர், அதிக மதிப்பெண்களை பெறுவது நிச்சயம். மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே மாணவர்கள் படித்தால், குறுக்கு வழிகளை தேடும் எண்ணம் உதிக்கும். மாறாக, அறிவை பெருக்கும் நோக்கில், படிக்க வேண்டும்.

மதிப்பெண்களும், மதிப்பெண் பட்டியலும், குறைந்தளவு பயனையே அளிக்கும். அறிவு, திறன், தன்னம்பிக்கை,அர்ப்பணிப்பு போன்றவை, வாழ்க்கையில் என்றும் உபயோகமாக இருக்கும்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், விமானப்படை தேர்வில் தோல்வி அடைந்தார். அந்த தோல்வியை அவர் ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால், மாபெரும் விஞ்ஞானியை, ஜனாதிபதியை இந்தியா பெற்றிருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.