Pages

Sunday, January 8, 2017

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் வரும் மே 7ம் தேதி இந்த தேர்வு நாடெங்கிலும் பல பகுதிகளில் நடைபெறும்.


இதற்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1400ம் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கட்டணங்களை செலுத்த பிப்ரவரி 1ம் தேதியே கடைசியாகும்.

இந்த தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.