Pages

Tuesday, December 20, 2016

‘பழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள்: தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்!

5,000 ரூபாய்க்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை இன்னும் உங்கள் கைகளில் நீங்கள் வைத்துள்ளீர்களா வங்கிகளுக்கு விரைந்து செல்ல
வேண்டும். ஆரிபிஐ திங்கட்கிழமை இன்று பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெப்பாசிட் செய்வது குறித்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.

⏩புதிய 5000 ரூபாய் விதி

புதிய விதிப்படி அதிகப்படியான தொகையை டிசம்பர் 30 வரை ஒரு முறை மட்டுமே வங்கியில் டெப்பாசிட் செய்ய முடியும். 5000 ரூபாய்க்குக் குறைவாக டெப்பாஸிட் செய்யலாம்.


⏩⏩எதற்கு புதிய விதி?

கணக்கில் வராமல் கருப்புப் பணமாக இருப்பதைக் கண்டறிய இந்த புதிய விதியை அமல்படுத்துவதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

⏩⏩விளக்கம் அளிக்க நேரிடும்!

5,000 ரூபாய்க்கு அதிகமாக வங்கிகளில் டெப்பாசிட் செய்யும் போது வங்கி அதிகாரிகள் உங்களிடம் கேள்வி கேட்பார்கள். அதற்கு திருப்திகரமான பதிலை நீங்கள் அளிக்க வேண்டும்.

⏩⏩⏩கடைசி நாள் ..

ரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 30 கடைசி நாள். அதன் பிறகு மாற்ற இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

⏩⏩⏩⏩ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும்.

வங்கி கணக்கில் 5000 ரூபாய்க்கு அதிகமான தொகையை டெப்பாஸிட் செய்யும் போது உங்கள் கணக்கிற்கு சரியான அடையாளம் மற்றும், முகவரி சான்றிதழ்களை அளித்து இருந்தால் மட்டுமே டெப்பாசிட் செய்ய இயலும்.

⏩⏩⏩⏩⏩யாருக்கு விலக்கு உண்டு?

இதுவே டிசம்பர் 17-ம் தேதி அறிவித்த பிரதான மந்திரி கரிப் கல்யாண யோஜனா திட்டத்தின் கீழ் கருப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வர இருப்பவர்களுக்கு இந்த விதி இல்லை

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.