Pages

Wednesday, December 28, 2016

ரேஷன் புகார் பதிவேடு : ஊழியர்களுக்கு உத்தரவு

ரேஷன் கடைகளில், புகார் பதிவேட்டை, மக்கள் பார்வைக்கு வைக்காமல், ஊழியர்கள்அலட்சியமாக உள்ளனர். ரேஷன் கடைகளில், புகார் பதிவேடு என்ற நோட்டு உள்ளது. அதில், மக்கள், தங்களின் புகார்களை எழுதுவர். தற்போது, பல கடைகளில், புகார் பதிவேடு இல்லாததால், மக்கள் புகார் செய்ய முடியாமல், சிரமப்பட்டு வருகின்றனர். 


இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில், மக்கள் பார்வையில் படும்படி, ஊழியர்கள் புகார் பதிவேட்டை வைக்க வேண்டும்; அதிகாரிகள், ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்கு செல்லும் போது, முதலில், அந்த பதிவேட்டை தான் பார்ப்பர். இதன் மூலம், மக்கள் தெரிவித்த புகார்களுக்கு, தீர்வு காணப்படும். சமீபகாலமாக ஊழியர்கள், பதிவேட்டை மறைப்பதாக, புகார்கள் வருகின்றன. எனவே, அவற்றை ஆய்வு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.