Pages

Wednesday, December 28, 2016

30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அபராதம்?

செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலஅவகாசம் 30–ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. அதன்பின்னர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 


இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், நாளை மறுநாள்(புதன்கிழமை) நடைபெறும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் தலா 10 எண்ணிக்கைக்கு மேல் வைத்திருந்தால் ரூ.50 ஆயிரம் அல்லது வைத்திருக்கும் பணத்தின் மதிப்புக்கு 5 மடங்கு இதில் எது பெரிய தொகையோ அந்த அளவு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது. செல்லாத நோட்டுகளை மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்வதற்கான காலஅவகாசமும் இருக்கிறது. அதற்கான காலம் குறைக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.