Pages

Friday, December 23, 2016

பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக் கோரிக்கை

பகுதிநேரப் பயிற்றுநர்களுக்குஊதிய உயர்வு அளிக்கவேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பகுதிநேரப் பயிற்றுநர்கள்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில், ரூ.5 ஆயிரம்தொகுப்பூதியத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேரபயிற்றுநர்கள் 2012ஆம் ஆண்டுநியமிக்கப்பட்டனர். 2014ஆம்ஆண்டில் இவர்களுக்கான ஊதியம்

ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.7 ஆயிரம்வழங்கப்படுகிறது. மாதத்துக்கு 12 அரைநாள் என தொகுப்பூதியத்தில்ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால்பண்டிக்கைகால போனஸ் கூடவழங்கப்படுவதில்லை. மேலும்கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறைமட்டுமே ஊதிய உயர்வுஅளிக்கப்பட்டுள்ளது.பணியின்போது
உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடோ, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலனோ வழங்கப்படுவதில்லை.
எனவே, தொகுப்பூதியதாரர்களுக்குவழங்கப்பட வேண்டிய நிலுவையில்உள்ள ரூ.51.30 கோடியை, அவர்களதுவங்கிக் கணக்கில் செலுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அப்போதையமுதல்வர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் உறுதியளித்துள்ளதால்அதனடிப்படையில் நடவடிக்கைஎடுத்து, பகுதிநேரபயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்கவேண்டுமென அதில்வலியுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.