முதல்வர் ஜெயலலிதாவிற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக இன்று அதிகாலை ஆஞ்ஜியோ சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதய துடிப்பு முடக்கம்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவருடைய இதய துடிப்பில் முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பிரத்யேக அறையிலிருந்து தீவிர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆஞ்ஜியோ சிகிச்சை
அவர் மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 4 மணி வரை மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். பின்னர், சுமார் 4 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு ஆஞ்ஜியோ சோதனை செய்தனர்.
தொடர் கண்காணிப்பு
இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காக ஆஞ்ஜியோ சோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சிகிச்சையை தொடர்ந்து அவரின் உடலில் ஏற்படும் எதிர்வினையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.