நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறையின் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் 2016–ம் ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய வளாக தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தனியார் வங்கி, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வளாக தேர்வு நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த வளாக தேர்வு வருகிற 19–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் அன்று காலை 10 மணிக்குள் அடையாள அட்டை, சுயதகவல் பதிவேடு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பதிவு செய்யவேண்டும். பதிவு கட்டணம் கிடையாது.
வளாக தேர்வு முதலில் எழுத்து தேர்வும், அடுத்து நேர்முக தேர்வும் நடத்தப்படும். தேர்ந்து எடுக்கப்படக்கூடியவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பயிற்சி அளிக்கப்படும்.
இந்த தகவலை பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறை இயக்குனர் (பொறுப்பு) வெளியப்பன் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.