Pages

Saturday, November 12, 2016

'இல்லந்தோறும் இணையம்' விண்ணப்பிக்க அவகாசம்

'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், மார்ச், 1 முதல், மாவட்ட தலைநகரங்களில், அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இரண்டாம் கட்டமாக, அனைத்து நகராட்சி பகுதிகளுக்கும், திட்டத்தை விரிவுப்படுத்த உள்ளது. 

இதில் சேர்ந்து, இணைய சேவை வழங்க விரும்புவோர், நிறுவனத்தின் இணைய தளத்தில் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்; வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இதுவரை, 7,317 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் பலர், கால அவகாசத்தை நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும், www.tactv.in என்ற இணையதளத்தில், 14ம் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருந்தால், 1800 425 2911 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.