Pages

Saturday, November 12, 2016

பள்ளிகளில் 4,000 -க்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணி நியமனம் எப்போது?

அரசுப் பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:


பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழக முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதியப் பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதைத் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்கிறது. மாற்றியமைக்கப்படும் புதியப் பாடத் திட்டம் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (நீட்) போன்ற போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் அமையும் என நம்புகிறோம்.

இதுபோல், பள்ளிகளில் நிர்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் தொய்வின்றி நடைபெற ஏதுவாக அனைத்து காலிப் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முன்வரவேண்டும். பள்ளிகளில் 4,265 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் காலிப் பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.