Pages

Tuesday, November 22, 2016

மாணவர் சேகரிப்பு விவரம் அவசர கதியில் ஆலோசனை!

மாணவர் விவரம் சேகரிப்பு தொடர்பாக, திருப்பூரில் நேற்று அவசர கதியில், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கல்வி மேம்பாட்டு தொகுப்பு திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களின் விவரங்களை சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கல்வித்துறை இயக்குனர் (பணியாளர் தொகுப்பு) சேதுராமன் வர்மா, ஒவ்வொரு மாவட்டமாக சென்று, மாணவர் விவரம் சேகரிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறார்.


இயக்குனர், திருப்பூருக்கு வரவுள்ளதாகவும், மாலை, 4:00 மணிக்கு, ஆலோசனை கூட்டத்தில் உடனடியாக பங்கேற்க வேண்டும் என, நேற்று மதியம் தலைமை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அவசர கதியில் பங்கேற்றனர். இதில், தலைமை ஆசிரியர்களிடம், பணி நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

கடந்த முறை நடந்த கூட்டத்தில் பேசிய இயக்குனர், ‘மாணவர் விவரம் சேகரிப்பதில் தலைமை ஆசிரியர்கள் சுணக்கமுடன் நடந்து கொண்டால், பட்டியல் தயாரிக்க முடியாது; பணியை வேகப்படுத்த வேண்டும்’ என்று எச்சரித்திருந்தார். இது குறித்து, ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனால், நேற்றைய கூட்டத்தை போட்டோ எடுக்க, செய்தி சேகரிக்க நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயலட்சுமியிடம் கேட்ட போது,“மாணவர் பட்டியல் தயாரிப்பு குறித்த ஆலோசனை மட்டுமே நடந்தது,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.